பக்கம்:நல்ல தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நல்ல தமிழ் எழுதினாலும் தவறு இல்லைதான். என்றாலும், இரண் டையும் உச்சரித்துப் பார்த்தால், முன்னது உச்சரிக்க எளி மையாக இருப்பதோடு ஒசை நயம் உடையதாகவும் இருக்கிறதல்லவா? ஆகவே உடம்படுமெய் தேவையாகிறது. இங்கு எது உடம்படுமெய்? 'ய்' என்பதல்லவா? மணி+ய்+ அழகிது = மணியழகிது. எனவே, 'ய்' உடம்படுமெய்யா கிறது. இது 'ய'கர வுடம்படுமெய் எ ன ப் ப டு ம். இது போன்ற வ'கர உடம்படுமெய்யும் உண்டு. நன்னூலார் இரண்டையும் சேர்த்து. - இ ைஐவழி யவவும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்என் றாகும். (462) எனக் கூறினார். இப்படியே எ+ யானை என்பது எவ் யானை என்றும், நாடு+யாது என்பது நாடியது என்றும் வருவனவற்றிற்கெல்லாம் இலக்கணம் கூறினார் இப்படியே உயிரெழுத்தின் முன் வல்லினம், மெல்லினம், இடையினம், வந்தால் பொருந்தும் இலக்கணங்களையெல்லாம் உயிர் ஈற்றுப் புணரியலில் கூறி, மெய் எழுத்தினைக் கடைசியில் கொண்ட சொற்கள் பெறும் மாறுபாடுகளை மெய் ஈற்றுப் புணரியலில் காட்டுகின்றனர் அறிஞர். நிலை மொழியீற்றில் மெய் இருந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இயல்பாக உடல்மேல் உயிர் வந்து பொருந்தும் எ ன் று விளக்கி, தோன்றல்-அழகன்=தோன்றலழகன்' என்று உதாரணமும் தருகின்றனர். இப்படி மெய் முன் மெய் எழுத்துச் சேர்ந் தால் என்னாகும் என்பதையும் காட்டுகின்றனர். இங்கே உதாரணமாக வழக்கிலுள்ள ஒரு சில சொற்றொ டர்களைக் கண்டு நாம் அமைவோம். திருகுறள் , "இப்படி சொல்', ' விறகு கடை' என்றெல்லாம் சிலர் பேசு வதையும் எழுதுவதையும் காண்கிறோம், ஆனால் அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/60&oldid=775167" இலிருந்து மீள்விக்கப்பட்டது