பக்கம்:நல்ல தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரும் சொற்கள் 57 தவறு, திருக்குறள், இப்படிச் சொல், விறகுக்கடை என்று தான் எழுத வேண்டும். இந்த விதியை எளிதாக அறிந்து கொள்ளத்தான் நன்னூலார், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்; வித வாதன மன்னே.” (165) என்று கூறினார். இது பொது விதியாகும். பின்னர்த் தனித் தனி ஒவ்வொன்றுக்கும் சிறப்பு விதியும் கூறுகின்றார். இவ்வாறு எழுத்து மிகுவதற்கும் மிகாமல் இருப்பதற்கும் சிலவிடங்களில் அதிக வேறுபாடுகளும் உள்ளன. சாதாரண மாகப் பசி, பிணி' என்னும் இரண்டு சொற்களை எடுத்துக் கொள்வோம் இரண்டையும் சேர்த்துப் பேசுவோம். பசி பிணி நாட்டைக் கெடுக்கின்றன; பசிப்பிணி நாட்டைக் கெடுக் கின்றது,' என அமைவதைக் காண்கிறோம். முன்னது பன்மை; பின்னது ஒருமையாய் உள்ளது. ஏன்? இரண்டிற்கும் என்ன வேறுபாடு? முன்னதில் இல்லாத 'ப்' ஒன்று பின்னதில் இரண்டுக்கும் இடையில் வந்துள்ளது. எனவே, மாறுபாடு காண்கிறோம். பசி பிணி என்றால் பசியும் பிணியும் என்ற உம்மைத் தொகையாக இரண்டும் தனித்தனி வெவ்வேறு பொருள்களாகிப் பன்மை வினை கொண்டு முடிகின்றன. ஆனால், பசிப்பிணி' என்று ஒற்று மிகுமானால் பசியாகிய பிணி என்று பண்புத் தொகையாகி ஒரே பொருளாகி ஒருமை வினை கொண்டு முடிகின்றது; இப்படியே சில ச்ொற்கள் சேரும் காலத்தில் ஒர் எழுத்து மிகுவதாலோ அன்றிக் குறை, வதாலோ பொருள் மாறுபட்டு நிற்பதும் உண்டு. எனவே, சொல்பவர் இலக்கண அமைதி அறிந்து புணர்ச்சிவழி பொருந்தச் சொல்ல வேண்டும்; எழுதுவதும் அப்படியே. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/61&oldid=775169" இலிருந்து மீள்விக்கப்பட்டது