பக்கம்:நல்ல தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நல்ல தமிழ் இந்தப் புணர்ச்சி விதியில் எண்ணுப் பெயர்களாகிய ஒன்று இரண்டு முதலியன தம்முள் தாம் சேர்வதற்குத் தனித் தனி விதிகள் வகுத்துள்ளார்கள். பதினொன்று, பன்னிரண்டு முதலியன எவ்வாறு சேர்ந்தன? இருபது, முப்பது எப்படி வந்தன? ஒன்பது, தொண்னூறு எப்படி எழுந்தன? இவை யெல்லாம் இலக்கண அமைதி முறையை ஒட்டியே அமைந் துள்ளன என அறிகின்றோம். இவற்றை யாரும் பெரும் பாலும் பிழைபட எழுதுவது இல்லை. இவற்றின் இலக்கணங் களும் அனைவருக்கும் தெரியா என்றாலும், பிழை இன்றி எழுதுகிறார்கள் என்றால், அதற்குப் பழக்கத்தின் அடிப்படை தான் காரணம். ஒரு சில சொற்கள் புணரும் போது சில இடங்களில் இயல்பாயும் சில இடங்களில் மிகுந்தும் புணருதல் உண்டு. நன்னூலில் கீழ்குலம், கீழ்க்குலம், கீழ்சாதி” கீழ்ச்சாதி’ என்ற உதாரணங்கள் காட்டியுள்ளனர். இவற் றைச் சொல்லும் இடமும் ஒசை கெடாத வகையும் அறிந்தே உபயோகிக்க வேண்டும். இப்படி இன்னும் எத்தனையோ புணர்ச்சி வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் இங்கே கூறி மாறாட்டம் உண்டாக்க விரும்பவில்லை நான். தமிழில் வடமொழிச் சொற்கள் வந்து வழங்கும் என்பதைப் பார்த்தோ மல்லவா? அவை அவ் வாறு வழங்கும் போது கொள்ளும் இரண்டொரு புணர்ச்சி விதிகளை மட்டும் கண்டு அமைவோம். வடமொழியில் 'சந்தி' என்று இதைச் சொல்வார்கள். இதில் மிக முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டுவன மூன்றே. அவை தீர்க்க சந்தி, குண சந்தி, விருத்தி சந்தி என்பன. நிலை மொழியின் கடைசியில் 'அ' அல்லது ஆ’ இருந்து, வருமொழி முதலிலும் அவையே வந்தால், இரண் டும் சேரும்போது இரண்டிடத்தும் உள்ள உயிர் கெட்டு 'ஆ' தோன்றுவது தீர்க்க சந்தி. நிலை மொழியின் கடைசியில் :இ அல்லது 'ஈ' இருந்து வருமொழியிலும் அவை வந்தால் அவை கெட 'ஈ' தோன்றுவதும், அது போன்றே உ, ஊவுக்குப் பதில் மற்றோர் ஊ தோன்றுவதும், அந்தச் சந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/62&oldid=775171" இலிருந்து மீள்விக்கப்பட்டது