பக்கம்:நல்ல தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரும் சொற்கள் 59 தியே. இவ்வாறு அன்றி, அ, ஆ, இ, ஈ க்குப் பதில் ‘ஏ’ தோன்றுவதும், அ, ஆ, உ, ஊ வுக்குப் பதில் 'ஒ' தோன்று வதும் குண சந்தியாகும். அ, ஆ, ஏ, ஐ க்குப் பதில் ஐ தோன்றுவதும். அ, ஆ, ஓ, ஒள வுக்குப் பதில் ஒள தோன்று வதும் விருத்தி சந்தியாகும். இராமாயணம் எ ன் ப து இராம+அயனம் என்னும் இரண்டின் சேர்க்கை தானே? முனி+ஈஸ்வரன் என்பது முனிஸ்வரன் ஆயிற்று. இராஜ+இந் திரன் என்பது இராஜேந்திரன் ஆயிற்று. இப்படியே மற்ற வையும். புணர்ச்சி இலக்கணம் சற்றே கடினந்தான்; இப்படி அமைந்தது என எடுத்துத் திட்டமாகக் காட்ட முடியாத ஒன்றுதான். எனினும், தொல்காப்பியர், பவணந்தியார் போன்ற புலவர்கள் ஒரளவு தொட்டுக் காட்டி அமைதி பெற் றுள்ளார்கள். எனினும், தொல்காப்பியர் எழுத்ததிகாரத் தின் இறுதியில்,

  • கிளந்த அல்ல செய்யுளில் திரிகவும்

வழங்கியன் மருங்கின் மருவொடு திரிகவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கில் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்.' (483) எனக் காட்டி எத்தனையோ கூறாது விடப்பட்டன எனவும், அவற்றை வழக்கியல் மூலமாகவேதான் அறிந்துகொள்ள இயலும் எனவும் காட்டி முடிக்கின்றார். எனவே, சொல்ல எளியதாய், சொற்செட்டு உடையதாய், இன்னோசை தழுவியதாய், தட்டுப்படாததாய், அமைவுடையதாய் உள்ள வகையில் சொற்களைச் சேர்க்க உதவுவதே புணர்ச்சி இலக் கணம் என்பதும், அதை ஆய்ந்து உணர்ந்து வழக்காற்று நெறி வழியே பயன்படுத்துவதே முறை என்பதும் தேற்றம். இனி, இச்சொற்களால் அமைந்த தொடர்கள் அல்லதுவாக்கி யங்களின் அமைதியைக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/63&oldid=775173" இலிருந்து மீள்விக்கப்பட்டது