பக்கம்:நல்ல தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சொற்றொடர்கள் மக்கள் உள்ளக் கருத்தை வெளிக்காட்டப் பயன்படு வதே மொழி. எனவே, அந்த மொழி செம்மையாக அமைந்தாலன்றி, மக்கள் தங்கள் உள்ளக் கருத்தை மற்றவர் களுக்கு உண்ர்த்த முடியாது. அந்தக் கருத்தை உணர்த்தும் மொழி பல சொற்றொடர்கள் அல்லது வாக்கியங்களால் ஆன ஒன்றாகும். உலகில் எத்தனையோ மொழிகள் வழக் கத்தில் உள்ளன. சில, பேச்சு வழக்கில் மட்டும் உள்ளன. சில எழுத்து வழக்கில் மட்டும் உள்ளன. சில, இரு வகை களிலும் அம்ைந்துள்ளன. அந்த மொழிகள் இன்று மொழி ஆராய்ச்சியாளர்களால் பல வகையிலும் பிரிக்கப்படுகின்றன. அந்த வகையில் அவர்கள் அவைகளைப் பிரிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று அந்த மொழிகளின் வாக்கிய அமைப்பும் வழக்கு முறையுமே யாகும். வாக்கியங்களில் சொற்கள் வழங்கும் முறைகள் மொழிதொறும் மாறுபடுவதுண்டு. சில ஒன்றியும் சில மாறு பட்டும் இருப்பதும் உண்டு. வாக்கியங்களுக்கு இன்றியமையாமல் வேண்டப்படுவன எழுவாயும் பயனிலையும். அடுத்தது செயப்படுபொருள். இந்த மூன்றும் வழங்கும் முறை மொழிதோறும் மாறுபடுவது உண்டு. தமிழில் வந்தேன்' என்றாலே நான் வந்தேன்' எனப் பொருள் நன்றாக விளங்கிவிடும். வந்தான்' என் றாலே அவன் வந்தான்' என்பதும், வந்தன என்றால் அவை வந்தன என்பதும் நன்கு விளங்கும். ஆனால், ஆங்கி லத்தில் அவ்வாறு பெற முடியுமா என எண்ணிப் பார்க்க வேண்டும். Came என்று சொன்னால் பொருள் விளங் &srg. ‘I came’ ‘He came’, ‘They came’ argåry Qamāja,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/64&oldid=775175" இலிருந்து மீள்விக்கப்பட்டது