பக்கம்:நல்ல தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்றொடர்கள் 61 வேண்டும் இவற்றுள்ளும் They' என்பது அவர்கள், அவை கள் என்று உயர்திணை, அஃறிணை என்ற இரு வகையிலும் வழங்கப் பெறும். எனவே, வாக்கிய அமைப்பு எழுவாய், பயனிலை அடிப்படையிலேயே மொழிதோறும் மாறுபடுவது இயற்கை. - ஆங்கிலத்தில் செயப்படுபொருள் பயனிலைக்குப்பின் o Gli ‘Rama took the book" srcirus» gli Guraw ysrrá, தமிழில் இராமன் நூலை எடுத்தான்' என்று பயனிலைக்கு முன் செயப்படுபொருள் வந்து நிற்க, பயனிலையே வாக்கிய முடிபாக அமைகின்றது. இப்படியே எத்தனையோ மாற்றங் களைச் சொல்லிக்கொண்ட போகலாம். ஆனால் அவை இங்கே நமக்குத் தேவை இல்லை. சொற்றொடர் அமைப்பு மொழிதோறும் மாறுபடும் என்பதையும் தமிழ் தனக்கென ஒர் அமைதியில் செல்லுகிறது என்பதையும் அறிந்துகொள் வது போதும். தமிழைப் போன்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளும் மொழிகளும் உள்ளன. அவை பற்றியெல்லாம் நாம் ஆராய வேண்டா ஒன்று முக்கியம்: இப்படிச் சில மொழிகளில் வாக்கிய அமைப்பு மாறுபடுவதனாலே, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி பெயர்க்க நினைக்கின்றவர்கள், அவ்வம்மொழி நிலைக்கு ஏற்ப, இலக்கண அமைதிக்கு ஏற்ப, மொழி பெயர்ப்பை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நன்கு அறிய வேண்டும். - கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் கள் மொழி பெயர்ப்பைச் சிறப்பாகக் கற்கிறார்கள். அவர் கள் மொழி பெயர்க்கும்போது எத்தனையோ பிழைகளைச் செய்கிறார்கள். சொல்லுக்குப் பொருள் புரியாத நிலை ஒன்று. அதில் தவறுகூட இல்லை என்பேன். பொருள். புரிந்திருந்தும், அதை மொழி பெயர்க்கும்போது அம்மொழி யில் திறம்பட எழுதத் தெரியாத அவல நிலையாலேயே பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/65&oldid=775177" இலிருந்து மீள்விக்கப்பட்டது