பக்கம்:நல்ல தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நல்ல தமிழ் மாணவர்கள் பிழைபடுகின்றார்கள். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் தமிழ் மாணவர்கள் இடர்ப்படுங் காட்சிகள் தமிழ் நாட்டில் பலப்பல இன்று அரசாங்கம் அனைத்தையும் தமிழில் கொண்டுவருகின்றது அரசாங்கமே தமிழாக்கம் .ெ ச ய் து அனைத்தையும் வெளியிடுகிறது. எனினும், அதன் வெளியீட்டையே அது சரியானதென்றோ, அரசாங்கம் ஒப்புதல் பெற்றதென்றோ, முடிந்த முடிபு என்றோ கூறிக்கொள்ள அஞ்சுகின்றது. காரணம், மொழி பெயர்ப்பில் உள்ள சில சிக்கல்களே எனலாம். என்றாலும், அதற்குக் காரணம் பொருள் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகும், மொழியின் அமைப்பில் அவை செம்மையாக அமைக் கப்படவில்லை என்பது தானே? ஆகவே, மொழிக்கு வாக்கிய அமைப்பே இன்றியமையாதது. தமிழில் இந்த வாக்கிய அமைப்புக்களின் வகையையும் முறையையும் நன்றாக விளக்கிக் காட்டியிருக்கிறார்கள். மிகு பழங்காலத்திலிருந்து தமிழில் உரைநடையும் பாட்டும் வழக் கத்தில் இருந்தன. அவை பற்றிய தெளிந்த அமைப்புக்களும் முறைகளும் தொல்காப்பியர் காலந்தொட்டே வரையறுத்த நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளன. நல்ல தமிழ் உருவா வதற்கு வாக்கிய அமைப்பு அல்லது சொற்றொடர் இலக் கணம் அடிப்படையாதலின், அதைப்பற்றி இனிக் காண் போம். தமிழில் சில வாக்கியங்கள் வெளிபடையாகவும், சில சில உறுப்புக்கள் குறைந்தும் பொருள் குறையாத நிலையில் வரும். அவற்றை விரி என்றும் தொகை என்றும் சொல்வார் கள். ஆயினும் அந்தத் தொகைகள் திட்டமாக இன்னின்ன வகையிலேதான் அமையவேண்டும் என வரையறை செய்து வைத்துள்ளனர். இது இராமன் நூல்', 'இராமன் மரம் வெட்டினான்’ என்னும் இந்த இரண்டும் தமிழ் வாக்கியங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/66&oldid=775179" இலிருந்து மீள்விக்கப்பட்டது