பக்கம்:நல்ல தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்றொடர்கள் 63 چیخصحتسلیے களே. இவற்றின் பெரருள்களும் நன்றாக விளங்குகின்றன. எனினும், இவை இரண்டும் தம்முள் ஒவ்வொன்றை மறைத்தே வைத்துள்ளன, அந்த முறையைத் தொகை என் பார்கள். இராமனுடைய நூல் அல்லது இராமனது நூல்' என்றால்தான் முழு அமைப்பும் நிறைவெய்துகின்றது. அதே போல மரத்தை வெட்டினான்' என்றால்தான் பொருள் வெளிப்படையாக விளங்குகின்றது. உடைய', 'அது' என்பன வேற்றுமை உருபுகளே. இவ்வாறு வாக்கியங் களுக்கு-சொற்றோடர்களுக்கு-இடையில் வேற்று ைம் உருபு மறைந்து வருவதையே வேற்றுமைத் தொகை என்று இலக்கண நூலோர் கூறுவார்கள். இவ்வாறு கூறுவது இலக்கணப்படி தவறு அன்று என்றாலும், வெளிப்படை யாகக் கூறுவதற்கும் இந்தத் தொகைகளுக்கும் வேறுபாடு காட்டுவதற்காகவே இரண்டாகப் பிரித்தார்கள். மற்றும் நாம் முன்னே கண்ட சொற்செட்டு இந்தத் தொகை வாக் கியங்களில் இருப்பதால், இவை மொழியின் இனிமையையும் திறமையையும் வளர்க்க நன்கு பயன்படுகின்றன அல்லவா! கவிதை ஒட்டத்தில் இவை நன்கு பயன்படுகின்றன. இவ் வேற்றுமைகளெல்லாம் மொழிக்கு அவசியமா என்பது பற்றித் தேலையானால் பிறகு ஆராய்வோம். இந்த வேற்றுமைத் தொகை போன்றே இன்னும் ஐந்து தொகைகள் உள்ளன. அவை வினைத்தொகை, பண்புத் தொகை உவமத்கொகை உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என்பன. அவற்றுக்கு ஒவ்வோர் உதாரணம் கண்டு மேலே செல்வோம். முன்னே பெயரெச்சம் என்பதைக் கண் டோமல்லவா? பெயர் எஞ்சி நிற்பதுதானே பெயரெச்சம்' வந்த பையன்' என்பது அத்தொடர்அல்லவா? இதில் வந்த” என்பதில் காலம் அறிய முடிகின்றது. ஆனால், காலம் மறைந் துள்ள பெயரெச்சங்களும் உள்ளன. அவற்றையே வினைத் தொகை என்பார்கள். 'காலம் கரந்த பெயரெச்சம் வினைத் தொகை’ என்பது இலக்கணம். கொல் களிறு அடு புலி’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/67&oldid=775181" இலிருந்து மீள்விக்கப்பட்டது