பக்கம்:நல்ல தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்றொடர்கள் 67 தவறு என்று என்று கொள்ள வேண்டுவதில்லை என முடிவு கட்டினார்கள். அதை வழு அமைதி' என அமைத்துக் கொண்டார்கள். ஏன் அப்படி? ஏன் பொய்யை மெய்யாக்க வேண்டும்? அதற்கு அவர்கள் கண்ட காரணம் ஒன்றேதான் ஆம்: விரைவினாலே - நாம் நிச்சயம் சீக்கிரம் உண்டு விடு வோம்' என்ற உணர்ச்சியால் - அவசரப்பட்டுக் கூறுகிறோம். எனவே, அதையும் தழுவிக் கொள்ளலாம் என்று கருதியே இது விரைவு பற்றி வந்த எதிர்காலத்தை இறந்த காலமாக் கிய காலவழு அமைதி' என்று அமைத்துக்கொண்டார்கள். எனவே, மக்கள் உள்ள உணர்ச்சியைக் காட்டப் பயன்படு வதுதான் மொழியின் அடிப்படையென்று இக்கட்டுரை முதலில் நான் தொடங்கியது தமிழைப் பொறுத்தவரையில் எத்துணை உண்மையென்பது தெரிகின்றதல்லவா இது கால வழு அமைதி. இப்படியே திணை, பால், எண், இட வழுஅமைதிகளும் உள்ளன. பெண் குழந்தையை வாடா கண்ணே' எனவும், ஆண் குழந்தையை அம்மா வருக’, எனவும் அன்பினால் அழைக்கின்றோம். அந்த அன்பின் வழிப்பிறந்த சொல். இலக்கணப் புலவர்களால் எப்படிக் குற்றமாக்கப் பெறும்? அது பால் வழு அமைதியாயிற்று. இப்படியே பிற வழு அமைதிகளும் உள்ளன. இவை அனைத் தம் மொழியின் செம்மை நலம் கெடாதிருப்பதற்கெனவும், பல்வேறு நிலை களில் பல்வேறு உணர்வுகளில் பட்டுழலும் மக்கள் மொழி வரம்பில் நின்றுதான் செயலாற்ற முடியும் என்பது முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அறுதியிடுதற் கெனவும், மொழியே அந்தந்த வகைகளில் பல நில்ைகளில் பிசி'னென இழுக்கப்பெறும் திறம் வாய்ந்ததெனவும், ஆகவே அந்த இன்றியமையாத இடங்களிலெல்லாம் அவற்றை வழு அமைதி செய்து கொள்க எனவும் காட்ட எழுந்தனவேயாம். இவற்றிற்கெல்லாம் திட்டமாக நன்னூலார் விதி வகுத் துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/71&oldid=775191" இலிருந்து மீள்விக்கப்பட்டது