பக்கம்:நல்ல தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நல்ல தமிழ் நனி நல்லவன்-உரிச்சொல் தெர்டர் பாம்பு பாம்பு-அடுக்குத் தொடர் இவற்றின் விரிவெல்லாம் நமக்குத் தேவை இல்லை. இவற்றின் அமைப்பு முறைகளாலே நல்ல வாக்கியங்கள் அமைய, அவற்றின் வழி மொழி செம்மைப்படும் என அறிதல் போதும். இவற்றுள் பல நம் வழக்கத்தில் தாமே வந்து விடும். இப்படி அமைவது இன்ன தொடராயிற்றே என நாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டுவதில்லை. பேசும் முறையும் எழுதம் வகையும் அறிந்து நல்ல தமிழை நாம் எழுதவோ பேசவோ முயல்வோமானால், இவை-தொகை யும் விரியும்--இயல்பாகவே அமைந்துவிடும். அதனாலே தான் 'செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற தொடர் நாட்டில் உலவுகின்றது. இனி இத்தகைய சொற்றொடர்களை அமைக்கும் போது - எழுதினாலும் பேசினாலும் - சில விடங்களில் உணர்ச்சி வயப்பட்டு நாம் தவறிவிடுகிறோம் என்பதை நமது அன்றாட வாழ்வில் காண இயலும். நாம் சாப்பிட உட்கார்ந்திருக்கவும் மாட்டோம்; விளையாட்டு மைதானத் துக்குப் போவதற்கு, முன் ஏற்பாட்டின்படியே நண்பன் நம் வாயிலில் வந்து சாப்பிட்டு விட்டாயா? என்று கேட்பான் நாம் என்ன சொல்வோம்? எண்ணிப் பாருங்கள், இதோ சாப்பிட்டுவிட்டேன்' என்று சொல்லி அவசரமாக எழுந்து அப்போதுதான் சாப்பிட உள்ளே செல்வோம். இவ்வாறு சொல்வது சரிதானா? சரியன்று. ஆனால், இலக்கணப் புலவர்கள் எண்ணிப் பார்த்தார்கள். சாப்பிட இலையில் உட்காரவுமில்லை. இப்படி இறந்த காலத்தில் சாப்பிட்டு விட்டேன்’ என்று பொய் சொல்லுகிறானே என நினைத் தனர். அது பொய்யா? அப்படிச் சொல்லலாமா?’ என் றெல்லாம் ஆராய்ந்தது அவர்கள் உள்ளம். முடிவில் அதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/70&oldid=775189" இலிருந்து மீள்விக்கப்பட்டது