பக்கம்:நல்ல தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்றொடர்கள் 65 டால் சொற்செட்டுடன் பேசும் முயற்சி வேகமும் மட்டுப் படுவதோடு, மொழியும் அழகியதாக அமையுமன்றோ? மொழியியலில் இத்தகைய தொடர்களின் அமைப்பு நன்கு போற்றப்படுகின்றது. மறைந்து வருகின்ற சொற்றொடர்கள் இவையென் றால், மறையாது வெளிப்பட்டு வருகின்ற சொற்றொடர் களும் உள என்பது தெரிகின்றதல்லவா? அவற்றை நன்னூ லார் நன்கு விளக்கியுள்ளார். வினைமுற்றுத் தொடர், வினையெச்சத் தொடர், பெயரெச்சத் தொடர், எழுவாய்த் தொடர், விளித்தொடர், வேற்றுமைத் தொடர், இடைச் சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர் என்பன அவை. இவற்றின் பொருள் எல்லாம் நன்றாக விளங்குவதோடு இவையெல்லாம் மறையாது வெளிப்படை யாக அமைந்துள்ளமையின் வேறு விளக்கம் வேண்டா என நினைத்து உதாரணத்தோடு அமைகின்றேன். வந்தான் இராமன்-வினைமுற்றுத் தொடர் வந்து போனான்-வினையெச்சத் தொடர் வந்த இராமன்-பெயரெச்சத் தொடர் இராமன் அவன்-எழுவாய்த் தொடர் இராமா வா-விளித் தொடர் (எட்டாம் வேற்றுமை) மரத்தை வெட்டினான்-இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் வாளால் வெட்டினான்-மூன்றாம் , , வயலுக்கு வேலி-நான்காம் > * கல்வியிற் பெரியவன்-ஐந்தாம் * 9 இராமனது நூல்-ஆறாம் 3 * வீட்டின் கண் இருந்தான்-ஏழாம் , இராமனே கொண்டான்-இடைச்சொல் தொடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/69&oldid=775185" இலிருந்து மீள்விக்கப்பட்டது