பக்கம்:நல்ல தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்றொடர்கள் 69 கின்றவர்களே காலத்தை வென்று வாழ்கிறார்கள் எனக் காண்கின்றோம். எளிய இனிய சொற்களாக அமைவதோடுகருத்துப் பொதிந்த மொழிகளாகவும் அமைய வேண்டுவதும் இன்றியமையாததாகும். திருக்குறள் இதற்கு ஒர் எடுத்துக் காட்டு. ஒவ்வொரு குறளும் சிறு சிறு சொற்களாலேயே - பெரும்பாலும் எல்லோருக்கும் விளங்கும் சொற்களாலேயேஅமைந்துள்ளது. எனினும், அதிலுள்ள பொருட் செறிவும் துணுக்கமும் காலமெனும் கடும்புனலை நீந்தி வெற்றி காண் கின்றன. இந்தச் செய்யுள் முறையில் மாத்திரமன்றி, உரை நடையிலும் இந்த எளிமையைக் கையாளலாம். இடைக் காலத்தில் உரையாசிரியர் சிலர் பாட்டினும் சூத்திரத்தினும் கடுமையாக உரைகளை ஆக்கிச் சென்றுவிட்டனர். திருக் குறளை அறிந்துகொள்வதிலும் பரிமேலழகர் உரையை அறிந்து கொள்வதே கடினம் என்றும் தொல்காப்பியத்தை அறிந்துகொள்வதைவிட நச்சினார்க்கினியர் உரையையும், சேனாவரையர் உரையையும் அறிந்து கொள்வதே கடினம் என்றும் பல ஆண்டுகள் பயின்ற நல்ல மாணவர்களே கூறுகின்றார்கள். எனவே, வாக்கியங்கள் எளிமையும் இனி மையும் கலந்து பயில்வோர் புரிந்து கொள்ளும் வகையில் அமையவேண்டும். இனி இந்த வாக்கியங்களை எழுதும்போதும் பேசும் போதும் அறிந்தும் அறியாமலும் நாம் செய்யும் சில தவறு களைக் கண்டு, அவற்றைத் திருத்திக்கொள்வதே நல்ல தமிழை நாட்டில் பரப்ப வழி செய்வதாகும் என்பதை அடுத் துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/73&oldid=775195" இலிருந்து மீள்விக்கப்பட்டது