பக்கம்:நல்ல தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மயக்கமும் தெளிவும் வாழ்வொடு பொருந்தியன மொழியும் அதன் அமைப் பும் இலக்கணமும் என்பதைத் தொடக்கத்திலேயே காட்டி யுள்ளேன் வேற்றுமையும் அந்த அடிப்படையிலேதான் அமைந்துள்ளது. இன்று உலகில் வேற்றுமையும் ஒற்றுமை யும் அரசியல்வாதிகளால் அலசி அலசிப் பேசப்படுகின்றன. சிறப்பாக இந்தியாவில் 'வேற்றுமையுள் ஒற்றுமை' (Unity in Diversity) என்ற தொடர் பேசப்படாத இடமே இல்லை. நாட்டில் நிலவும் இத்தனை வேற்றுமைகளும் ஒற்றுமைக்கு வழி கோலுவதற்கே என்று வாதிப்பவரும் உண்டு. ஆம்! இல் லாத வேற்றுமையை இருப்பதாகக் கற்பித்துக்கொண்டு, பின் அவற்றுள் ஒற்றுமை வளர்க்கப் பாடுபடுவானேன்? வரலாறு இதற்குப் பதில் சொல்லும். மக்களினம் சேர்ந்து வாழக் கற்றுக்கொண்ட காலத்தில் இவ்வேற்றுமை தேவைப்பட்டது சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று வள்ளுவர் கூறியபடி தொழில் காரணமாக மக்கள் அமைப் பில் வேறுபாடுகள் உருவாயின. அவ்வேற்றுமை மக்கள் அனைவரும் ஒன்றி வாழ்ந்து உயர்வு அடைவதற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருவர் மற்றவருக்கு உதவுவதற்கெனவே தொழில் வேறுபாடு அமைந்தது. உடல் உறுப்புக்கள் அனைத்தும் ஒன்றிப் பாடுபட்டுப் பயன் பெறுவது போன்று, மக்கள் சமுதாய உறுப்புக்களாய் நின்று உழைத்து ஒன்றிச் சமுதாயம் வளரப் பாடுபடவே வேறுபாடு உண்டாயிற்று. ஆம். அதே நிலையிலேதான் இந்த மொழி வேற்றுமைகளும் தோன்றின. மக்கள் இனத்துத் தொழில் வேறுபாட்டை முதலில் நான்காகப் பிரித்தார்கள் என்பர். இன்று அப்பிரிவு நாற்பதினாயிரமாக வளர்ந்துவிட்டது. ஆனால், தமிழில் இவ்வேற்றுமை எட்டு' என்னும் அளவிலே அமைக்கப் பெற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/74&oldid=775196" இலிருந்து மீள்விக்கப்பட்டது