பக்கம்:நல்ல தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கமும் தெளிவும் 71 றது. முதலும் எட்டும் நீங்கினால், உருபு உள்ளவை இடை யில் உள்ள ஆறுமேயாம். மக்களுள் உண்டான வேறுபாடு எப்படிச் சமுதாயத்தை வளர்க்க உதவி செய்ததோ, அது போன்றே மொழியிடை அமைந்த இந்த வேற்றுமைகளும் அம்மொழியை அழகுபடுத் தவும் விளங்க வைக்கவுமே பயன்பட்டன. இந்த வேற்றுமை உருபுகள் இல்லையானால், எப்படி எல்லா வாக்கியங்களின் பொருள்களையும் அறிந்துகொள்ள முடியும்? மனித இனம் தொழில் கருதிப் பிரியவில்லையானால் எப்படி நாட்டில் நல்ல பல தொழில்களும் பண்பாடுகளும் வளர்ந்து மக்கள் சமுதாயத்தை வளர்க்க முடியும்? ஆனால், ஒன்றில் வேறு பாடு காண்கிறது. ஒன்றிய சமுதாயத்தை வாழவைக்கத் தோன்றிய தொழில் வேறுபாடு, இன்று அச்சமுதாயத்தையே கருவறுக்கும் கூரிய வாளாக மாறிவிட்டது, நாட்டில் எங்கும் இவ்வேறுபாட்டின் அடிப்படையில் எத்தனை எத்தனை கொடுமைகளைக் காண்கிறோம்! சாதி மத வேறுபாடற்ற சமுதாயம் என்று வாயால் பேசியும் எழுதியும், அதே மூச்சில் அந்தச் சாதி அடிப்படையில் சண்டைகளை முட்டிவிடும் கொடுமையை நாட்டில் இன்று நாள்தோறும் காண்கின் றோம். இந்தக் கொடுமை மொழியின் வேற்றுமையில் இல்லை. மொழியில் உண்டான அந்த வேற்றுமைகள் - அன்றும் சரி, இன்றும் சரி - அந்த மொழியை வளர்க்கவும், செம்மைப்படுத்தவும், விளங்க வைக்கவுமே பயன்படுகின்றன. இந்த நிலையில் அவற்றைப்பற்றிக் கண்டு அறிந்துகொள்ள விரும்புவது நலமேயாகும். இவ்வேற்றுமை தமிழில் மட்டும் இருக்கிறது என எண்ண வேண்டா. வடமொழி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இருப்பதை அம்மொழி அறிந்த மாணவர்கள் நன்கு அறிவார் கள். தமிழில் இதற்கு இட்ட பெயர்தான் சிறப்புடைத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/75&oldid=775197" இலிருந்து மீள்விக்கப்பட்டது