பக்கம்:நல்ல தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நல்ல தமிழ் பிறமொழியில் இந்த வேற்றுமைக்கு அமைந்த பெயர்களின் காரணங்கள் திட்டமாக விளங்கவில்லை. ஆனால், தமிழில் இதன் பெயர்க் காரணத்தை இலக்கணப் புலவர்கள் நன்றாக விளக்கியே செல்கிறார்கள். தொல்காப்பியர் வேற்றுமை தாமே ஏழென மொழிப' என்று கூறி, பின் விளியைச் சேர்த்து எட்டாக்கி, அவற்றிற்கெனச் சொல்லதிகாரத்தில் மூன்று இயல்களை அமைத்து, நன்றாக விளக்கிச் சொல்லு கின்றார். நன்னூலார், "ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும்ஈ றாய்ப்பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை.' என்று தொல்காப்பிய இயல்களைத் தழுவி வேற்றுமை எட்டே என்று கூறி, அதன் பெயர்க் காரணத்தையும் விளக்குகின்றார்; வேற்றுமையென்பது பெயர்ச் சொல்லின் இறுதியில் வரும் என்றும், அவ்வாறு வந்து அந்தப் பெயர்ச் சொல்லுக்கு உரிய பொருளை மாற்றி நிற்கும் என்றும் காட்டுகின்றார். 'இராமன்' என்பதற்கும், இராமனை' என்பதற்கும், இராமனால் என்பதற்கும் உள்ள வேறுபாடு யாருக்குத்தான் விளங்காது? இராமன் என்ற ஒரே சொல்லில் வெவ்வேறு வேற்றுமை உருபுகள் வந்து அச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதாலேயே அது வேற்றுமையா யிற்று என்பதை இதனினும் எப்படி நன்றாக எடுத்துக்காட்ட இயலும்? இந்த வேறுபாடுகள் எடுத்துக் காட்டப் பெறா விட்டால், மொழி எப்படி உண்மையில் கருத்தை விளக்குவ தாகும்? இராமன் மரம் வாள் வெட்டினான்' என்று வேற்றுமை /உருபுகள் இல்லாமல் சொல்லிப் பாருங்கள். இதன் பொருள் நன்றாக விளங்குகிறதா? எப்படி விளங்கும்: இராமன் மரத்தை வாளால் வெட்டினான்’ என்றால், சிறு குழந்தைக்கும் பொருள் விளங்குமல்லவா? எனவே, இவ்வாறு தெளிவு பெற்ற மொழியை இசைத்து, அதன் பயனை மக்கள் நன்கு உணரும் பெர்ருட்டு அமைப்பதே வேற்றுமையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/76&oldid=775198" இலிருந்து மீள்விக்கப்பட்டது