பக்கம்:நல்ல தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கமும் தெளிவும் 73 இதில் முதல் வேற்றுமை என்று. உள்ளதையே வேறுபடுத் தாத நிலையில், ஏன் கூற வேண்டும் என்ற ஐயம் சிலருக்கு எழலாம். எனினும், ஆராய்ந்தால் அதற்கும் காரணம் உண்டு இராமன் என்ற சொல்லை மாத்திரம் சொன்னால், அது முதல் வேற்றுமையாகாது. அச்சொல் அடுத்து வரும் பயணி லைக்கு எழுவாயாய் 'இராமன் வந்தான்' என அமைந்தாற் றான் அது எழுவாய் வேற்றுமையாகும் அதில் இராமன் என்ற சொல் மாறுபாடின்றி வரினும், அதன் பொருளிலும் செயலிலும் மாறுபாடு காண்கின்றமையாலும், இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ (தொல்) என்ற விதியின் வழியில் உள்ளது இதில் சிறக்க எடுத்துக் காட்டுதலாலும், தனிச் சொல்லிலும் இத்தொடரில் வரும் சொல் பொருளள வில் மாறுபடுதலாலும் அதையும் வேற்றுமை என்றே கொண் டனர். அது பொருத்தந்தானே! வேற்றுமைகளின் உருபுகளை மேலே கண்டோம். எனவே, இந்த அளவோடு வேற்றுமை பற்றி நிறுத்திக்கொள் ளலாம். என்றாலும், செய்யுளில் வரும் இந்த வேற்றுமை பற்றியும், ஒரே வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேற்று மைகள் வருவது பற்றியும் காண்போம் வேற்றுமை மயங் கியல்' என்ற ஓர் இயல் அமைத்துத் தொல்காப்பியர் அதில் உண்டாகும் மயக்கத்தையும் வேறுபாட்டையும் காட்டியுள் ளார். நன்னூலார், 'யாதன் உருபிற் கூறிற் றாயினும் பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்.' என வரையறுத்தார். எனவே, உருபுகள் முக்கியமாயினும், செய்யுளிலும் பிற தேவையான இடங்களிலும் ஒரு வேற் றுமை உருபு நிற்றற்குரிய இடத்தில் வேறு வேற்றுமை உருபு வந்து அமைவதும் உண்டு. அப்போது என்ன பொருளில் அது 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/77&oldid=775199" இலிருந்து மீள்விக்கப்பட்டது