பக்கம்:நல்ல தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நல்ல தமிழ் , W. வருகின்றதோ, அந்த வேற்றுமை என்றுதான். அதைச் சொல்ல வேண்டும். பெரும்பாலும் இவ்வேற்றுமை மயக்கம் செய்யுளிலேதான் இடம் பெறும். மற்றும், தொல்காப்பியர் இன்னின்ன வேற்றுமை இன்னின்ன வகையில் வரும் என்று விளக்கிக் காட்டுகின்றார். மரத்தைக் கிளையை வெட்டி னான். என்று சொல்லுவது சரிதானா? எண்ணிப் பார்த் தால், சரியெனவே படுகின்றது. இலக்கணத்திலும் தவறு இல்லை என்றுகூடச் சொல்லிவிடலாம். என்றாலும், அதைச் சொல்லும் போது மொழி தடுமாறுவது போன்ற உணர்ச்சி உண்டாகின்றது. “மரத்திலிருந்து கிளையை வெட்டினான்,' என்றாலும் சரி போலத் தெரிகின்றது என் றாலும், அதிலும் சொற் செட்டும் சொல் அழகு அமைப்பும் இல்லை எனத் தெரிகின்றதல்லவா?. அதனால், தொல்காப் பியர் மரத்தினது கிளையை வெட்டினான்’ எனச் சொல்லு மாறு விதி அமைக்கிறார். (அவர் இவ்விதிகளை அவர் காலத்துக்கு முன் இருந்த இலக்கிய மரபுகளைக் கொண்டே இயற்றினார் என்பது நன்கு அறிந்த ஒன்று.) 'முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்குஐ வருமே. (571) என்று தொல்காப்பியர் திட்டமிட்டுக் கூறியுள்ளார். "அது முதற் காயின் சினைக்கு ஐயாகும்.” என்பது நன்னூல். இவ்வாறு தமிழ் இலக்கண நூலார் வேற்றுமையை இட மறிந்து பயன்படுத்த வேண்டுமென்று கூறி, அதன் வழி யின் செம்மை நலம் கெடாமல் பாதுகாப்பதோடு, இனிமை யும் எளிமையும் மாறா நிலையினையும் வலியுறுத்துகின்றார் கள். மொழிக்கு இவ்வேற்றுமை இன்றியமையாத காரணத் தினாலேதான் இது பற்றி ஆசிரியர்கள் அதிக இலக்கண நெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/78&oldid=775200" இலிருந்து மீள்விக்கப்பட்டது