பக்கம்:நல்ல தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கமும் தெளிவும் 75 காட்டியுள்ளார்கள். இப்போது இது போதும் என அமை, கிறேன். இப்படியே திணையும், பாலும், எண்ணும், இடமும், மொழி செம்மையும் எளிமையும் செட்டும் சிறப்பும் பெறப் பயன்படுவனவே என்று கூறி, இன்னும் இவை பற்றி விரிப்பின் பெருகும் என்று அஞ்சி மேலே செல்லலாம் என நினைக்கிறேன். . . . . . . . வாக்கியங்களின் அமைப்புக்களைப் பார்த்துக் கொண்டே வந்தோமல்லவா? மொழியை வாக்கிய அமைப்புக்களே விளக் குவன என்பதை அறிந்தோம். அந்த வாக்கிய அமைப்புக் களில் முன்னரே சில தொடர்களைக் கண்டோம். தொகை நிலைத் தொடர், தொகா நிலைத் தொடர் என அவை அமைந்த நிலையினை அறிந்தோம். தமிழ் மொழியில் வாக் கியங்களைப் பிழைபடப் பலர் எழுதுகின்றனர். அவற்றை விளக்கி அவற்றின் திருத்தங்களைக் காட்டுவதன் முன், இம் மொழியில் ஒர்ே தன்மையுடையனவாகத் தோன்றினும், சில் வகையில் மாறுபடும் சில தொடர்களைப் பற்றிக் கூறுதல் நலம் எனக் கருதுகின்றேன். தமிழில் இரட்டைக களவி, அடுக்குத் தொடர் என்று இரு பிரிவுகள் உள்ளன. இரண்டிலும் ஒரு சொல் இரு முறை வந்து ஒலிப்பது போலவும் அவற்றுள் வேறுபாடு இல்லாதது போலவும் தோன்றும். என்றாலும், ஆராய்ந்து பார்த்தால், இரண்டுக்கும் வேறுபாடு உண்டு எனத் தோன்றும். அவை யாவை? இரட்டைக் கிளவி சலசலவென நீர் ஓடிற்று. சலசல என்பதைப் பிரித்தால் இது பொருள் தாராது. இது ஒலிக் குறிப்பு. இது இரண்டுக்குமேல் சேர்ந்து வாராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/79&oldid=775201" இலிருந்து மீள்விக்கப்பட்டது