பக்கம்:நல்ல தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நல்ல தமிழ் அடுக்குத் தொடர் பாம்புபாம்பு எனக் கூவினன் இதைப் பிரிப்பினும், ஒவ்வொரு சொல்லும் தனி நின்று பொருள் தரும், 2. இத்தொடர் சந்தர்ப்பத்திற்கியைந்தபடி அடுக்கி வரும். பெயர் வினை இடை, உரி என்ற நான்கு சொற்களும் அடுக்கி வரும்.) 3. இரண்டு, மூன்று நான்கு முறை அடுக்கி வரும். இப்படியே ஆகுபெயர் அன்மொழித் தொகை என்ற இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. அன்மொழித் தொகை யைப் பற்றி ஒரளவு முன்னரே கண்டுள்ளோம். ஆகுபெயர், ஒன்றன் இயற்பெயர் அதன் சம்பந்தமுடைய வேறு ஒன்றற்கு ஆகிவருவது. கார் அறுத்தான்' என்பதில் கார்’ என்னும் காலத்தின் பெயர், அக்காலத்தில் விளையும் நெல்லுக்கு ஆகி வந்தது. அன்மொழித் தொகை பிற தொகையோடு சார்ந்து அதில் உள்ளது அல்லாத வேறொரு சொல்லில் பொருள் சிறந்து முடிவது. இரண்டும் வேறு பொருள்களைக் குறிப் பனவேயாயினும், இவற்றின் அமைப்பிலும் ஆட்சி முறை யிலும் சில வேறுபாடுகள் உள. அவை யாவை? ஆகு பெயர் ஒன்றன் பெயர் மற்றொன்றற்குப் பெயராய் வருவது. 2. ஒரு மொழியில் வருவது. . 3. சொல்லோடு இயைபு பற்றிய பிறிதொன்றை விளக்கு வது. - அன்மொழித் தொகை தொகையாய் வருவது. 2. தொடர்மொழியில் வருவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/80&oldid=775203" இலிருந்து மீள்விக்கப்பட்டது