பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாழ்க்கை என்பது வானவில்லே : வாழ்ந்திடும் வரைதான் அச்சொல்லே வாழ்வோம் சிறப்பாய் இருக்கும்வரை வளர்வோம் செழிப்பாய் சிரிக்கும்வரை அன்னையின் சொல்லைக் கேட்கும்வரை ஆபத்து உங்களை அணுகாது என்னை விட்டே பிரியாதிர். இன்னல் தனையே அடையாதீர்! தாயின் பேச்சைக் கேட்டுவிட்டு தலைகளை ஆட்டின குஞ்சுகளும்! வாயால் தரையைக் கீறிவிட்டு மறுத்தே கூறும் ஒருகுஞ்சு "கேழ்வர கில்நெய் வடிவதென்றால் கேட்பவர் மதிஎங்கு போயிற்றோ! சூழும் துன்பம் வருவதென்றால் சும்மா நானும் இருப்பேனோ? பசும்பால் சிவப்பு எனச்சொன்னால் பாரில் கேட்பவர் பொறுப்பாரோ? நிசம்போல் பொய்யைத் தாய்சொன்னால் நல்லவர் கேட்டே சிரிப்பாரே!