பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 தாயின் சிறகில் தவமிருக்கும். தணல்போல் அணைப்பில் சுகமிருக்கும் வாயில் உணவைப் பிடித்திழுத்து வம்பால் ஒன்று வழிமறிக்கும். எத்தனைக் குஞ்சுகள் இருந்தாலும் எல்லாம் தாய்க்குப் பிள்ளைகளே! எத்தனைத் துன்பம் வந்தாலும் எல்லாம் தாய்க்கு இன்பங்களே! ஓடிப் போகும் குஞ்சுகளை ஓடா தேஎனத் தாய்தடுத்து, நாடித் தேடி இரைகொடுத்து நன்றாய் வளர்க்கும் தாய்க்கோழி குஞ்சுகள் இடையே ஒருகுஞ்சு * குறும்பும் கர்வமும் தான்கொண்டு, அஞ்சுவ தில்லை; தாய்ச்சொல்லை அணுவள வேனும் மதிப்பதில்லை சிறகால் குஞ்சுகள் தனை அனைத்து சீர்பெறும் அலகால் முகம்தடவி, அறிவுரை சொல்லும் தாய்க்கோழி அன்பினைக் காட்டும் தான்கூவி