பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.34 என்னால் என்ன செய்ய முடியும் இரக்கப் படுகிறேன் உன் மேலே அவனைக் கேட்டால் உண்மை வரும். கவலைகள் தீரும் நன்மை வரும்! மாடுகள் மேய்க்கும் மணிசாமி மடையன் எங்கே போனானோ பாடுகள் படுத்தி வைப்பவனைப் பார்த்தால் கேள்வியும் கேட்பாயே? தருமன்: மாட்டை மேய்ப்பது உன் வேலை மறந்தே செய்கிறாய் வீண் வேலை! பூட்டை உடைத்துத் திறந்து விடு போயே பசுவை மேயவிடு! மணிசாமி: அதற்கும் காரணம் இல்லாமலா இருக்கும் சொல்வேன் கேட்டிடுவாய்! அசையும் பொக்கை வாய்க்கிழவி அன்னம் தருவாள் காலையிலே!