பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தன் படையை ஊக்கிப் பேசின்ை-அவன்தன் சாகசத்தைக் கண்டவரும் வீரிட்டெ ழுந்தார் வந்தபகை வெள்ளத்தை யெல்லாம்-எலிகளை மாய்க்கும் பாம்பு போலவீழ்த்தித் தோள்கொட்டினர் கரிகாலன் தாக்கு மிடத்தில்-பகைவர்கள் காற்று முன்னே பஞ்செனவே பறந்தொழிந்தார் ஒருசிறு பையனென்று நாம்-எண்ணியிங்கு ஒன்றுகூடி வந்தபிழை என்று மொழிந்தார் வேளிர்களும் மருண்டு விட்டார்-பாண்டியனும் வேற்று நாட்டிற் காசை தவ றென்று குலைந்தான் தேளின் கொட்டுப் பட்டதிருடன்-வாயிழந்து திரும்பியே ஒடும்நிலை தன்னை யடைந்தார் சேரமன்னன் புறம் நாணியே-உணவொன்றும் தீண்டாமல் நல்லுயிரைப் போக்கி மறைந்தான் போரெனில் வெண்ணிப் போரெனக்-கவிஞர்கள் போற்றக் கரி காலன் தனிச் சிறப்பெய்தின்ை. 58