பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொங்கலோ பொங்கல்!
பொங்குக இன்பம்! அன்பும் பொங்குக!

பொங்கலோ பொங்கல்!

பொங்கலிது பொங்கல்
புத்தமுதப் பொங்கல்
எங்கள் நன்றிப் பொங்கல்
இனிய மாட்டுப் பொங்கல்

பொங்கலோ பொங்கல்!

மங்களம்சேர் பொங்கல்
வாழ்வுதரும் பொங்கல்
எங்கள் வாயில் கரும்பு
இனிக்க வரும் பொங்கல்

பொங்கலோ பொங்கல்!

60