பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குட்டியின் தந்திரம் அஞ்சு குள்ள நரிகள் ஓர் ஆட்டுக் குட்டியைக் கண்டன; வஞ்ச மாகச் சூழ்ந்ததை மடக்கிக் கொல்ல முயன்றன. நெஞ்சில் அச்சம் இன்றியே நின்று சொல்லும் குட்டியும்: "கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் குச்சு நாய்கள் வருவதை கெஞ்சிக் கெஞ்சி நீங்களும் கேட்ட போதும் அவைவிடா; கஞ்சிக் கழுகும் வயிற்றினைக் கடித்துக் கிழித்துக் கொல்லுமே. தஞ்சம் என்னை அடைந்திடில் தயவாய்க் காப்பேன்’ என்றதும், நஞ்சு கதில் புகுந்ததோ நடுங்கிக் குறுகித் துடித்துமே பஞ்சு போல நரிகளும் பறந்து போகக் குட்டியும் கொஞ்சிக் கொஞ்சிக் கூவியே குதித்துத் தாயை அடைந்ததே! 62