பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பாரி: சேனாதி: பாரி: கபிலர்:

  • ~

அன்புக்கும், பண்புக்கும் பதிலாக ஆணவம். அகம்பாவம். வீரமும் விவேகமும் அவர்களை விட்டு விலகி விட்டதோ என்னவோ, வாய்ப் பேச்சிலே இன்று இன்பம் கண்டு கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் தலைவிதி. எடுத்து வாழும் இன்பத்தை விட, கொடுத்து வாழும் இன்பமே மிகச் சிறந்தது. இதைக் கொடுத்துப் பார்த்தால் தான் புரியும். கெடுத்துப் பார்த்தால் புரியாது. சேனாதிபதி முற்றுகையால் நம் மக்கள் எல்லாம் பாதிக்கப் படவில்லையே. நிம்மதியாகவே வாழ்கிறார்கள். தேவையான உணவு, அன்றாடம் வேண்டிய அத்தனையும் எளிதாகவே கிடைப்பதால், யுத்த பயம் என்ற நினைவே இல்லாமல், வழக்கம் போலவே வாழ்கின்றார்கள். பகைவர்கள் , எத்தனை மாதங்கள் இங்கே காத்துக் கிடந்தாலும், நம்மையோ, நமது மக்களையோ ஒன்றும் செய்துவிட முடியாது. நன்று சேனாதிபதி! நண்பரே (கபிலரை நோக்கி) அந்த மன்னர்களைத் திருத்த, மதியை மாற்ற வேறு ஏதாவது நல்ல மார்க்கம் உண்டா? யோசிக்கிறேன் மன்னவா... அவர்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும். இந்தப் போர்க்காட்சி போக வேண்டும். அதற்கு நான் முயற்சி செய்கிறேன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/41&oldid=775429" இலிருந்து மீள்விக்கப்பட்டது