பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


            யுடன் - காட்சியளிக்கின்றனர்.   
            அப்பொழுது சேரன் எழுந்து 
            உலவுகின்றான்.)
  சேரன்:   மலையை முற்றுகை இட்டுப் பயனில்லை. 
            மாதங்கள் மூன்று ஓடி விட்டன. அந்த 
            மடையனின் மண்டைக் கனம் இன்னும் 
            அடங்கவில்லை. நம் படை புகவும் ஒரு 
            தடங்கலும் இல்லை. -
  சோழன்: நமக்கு ஒரு தூது கூட அனுப்பவும் இல்லை. இது 
            என்ன பறம்புமலையா! இல்லை பாம்பு
            மலையா... 
  பாண்டி: உணவுக்கு என்ன செய்கிறான்...ஒரு வழி கூட 
           இல்லாமல் அடைத்து விட்டோம். போக்கு 
           வரத்து எப்படி இருக்கும்? ஏதாவது சரங்க வழி...
  சேரன்:   இல்லை... இருக்க வழி இல்லை. பாருங்கள். 
            இன்னும் இரண்டே நாளில் அங்கிருந்து பதில் 
            வரத்தான் போகிறது.
  சோழன்: ஆமாம். பசித்த மக்கள் பாய்ந்தெழுந்தால், பாரி 
            எங்கே போவான்? பதறி அடித்துக் கொண்டு 
            இங்குதான் ஓடி வருவான். 
  பாண்டி: மயில் இறகு போடட்டும் என்று காத்திருப்பதில் 
           புண்ணியமில்லை. இதற்கு ஒரு ஏற்பாடு செய்து 
           தான் தீர வேண்டும், புலி பதுங்கி இருக்கிறது 
           என்றால் பாய்வதற்காகத்தான். நாம் எளிதாக 
           எண்ணினால், நம் கதி அதோகதிதான்.