பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நல்ல பிள்ளையார்


நான் செய்த அபசாரத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் அவ்வாறு செய்ததற்கு என்ன காரணம் என்பதை மாத்திரம் மகாராஜாவுக்கு விண்ணப்பம் செய்து கொள்கிறேன்.”

அரசன் : என்ன காரணம் ?

வித்தையாடி: நான் கோகர்ண வித்தை செய்து காட்டினபோது பலர் என்னைப் பரீட்சை செய்தார் கள். அந்த இடையனும் என்னைப் பரீட்சித்தான். என்மேல் ஒரு சிறு கல்லைப் போட்டான், நான் அந்தக் கல் விழுந்த இடத்தை மாத்திரம் சுழித்துக் கொண்டேன். பசுவின் சுபாவம் இது. இதை நன்றாக அறிந்த இடையன் என் சாமர்த்தியத்தைத் தெரிந்து கொண்டான். அவன் செய்த பரீட்சை உயர்ந்தது. அவன் மனம் மகிழ்ந்து தந்த பரிசு எப்படியிருந்தாலும் விஷயத்தை அறிந்து கொடுத்தது; ஆகையால் விஷயம் அறியாமல் தந்த பரிசுகளைக் காட்டிலும் அதனிடம் அந்தச் சமயத்தில் எனக்கு அதிக மதிப்பு உண்டாயிற்று. இது ராஜசபை' என்ற ஞாபகம் எனக்கு அந்த நிமிஷத்தில் மறந்து போயிற்று.


அரசன் உண்மையை உணர்ந்தான். அவன் நல்ல அறிவாளியாகையால் வித்தையாடி சொன்னது நியாயமே என்று தெரிந்து கொண்டான். அவனுக்குப் பின்னும் சில பரிசுகளேத் தந்தான். அவனைப் பரீட்சித்த இடையனை வருவித்துத் தன் அரண்மனைப் பசுக்களைப் பாதுகாக்கும் உத்தி யோகத்தை அளித்தான்.

         __________