பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைப்பாம்பும் நரியும் 51

பாம்புக்கு நண்டு ருசியை விட மனம் இல்லை. என்ருலும் தனக்குப் பெரிய உபகாரம் செய்த நரிக்கு இதைச் செய்யாமல் இருக்கக்கூடாது என்று, அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு, அப்படியே நடந்து வந்தது. -

நரிக்கு இப்போது ஒரே கொண்ணுரம். தினந் தோறும் நண்டு விருந்து அதற்குக் கிடைத்துக் கொண்டு வந்தது. .

சில நாட்கள் ஆயின, பாம்புக்கு நண்டு ருசி மறக்கவில்லை. மறுபடியும் அதைத் தின்னவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. சில நண்டுகளைத் தின்னவும் தின்றது. அதை,நரி பார்த்து விட்டது,

என்ன அண்ணே, நீயும் நண்டைத் தின்கிருயே! எல்லாவற்றையுமே எனக்குக் கொடுப்ப தாக வாக்களித்துவிட்டு இப்போது பங்குக்கு வந்து விட்டாயே!” இப்படி நரி சொல்லியது. .

'தம்பி, உனக்குத்தான் நிறைய நண்டுகள் கிடைக்கின்றனவே; நான் நாலு அஞ்சு தின்ருல் உனக்குக் குறைந்து போகுமா ?” என்று கேட்டது

பாம்பு. ... -