பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தல்ல பிள்ளையார்

யிருந்தது. வந்தவர்கள் கண்களே அகல விழித்துப் பார்த்தார்கள். ஒரே ஆச்சரியமாக இருந்தது. சாப் பிட்டார்கள். நல்ல விருந்து, பிறகு அவர்களுக்குப் புதிய ஆடைகளைச் சாமியார் தந்தார். அங்கே இருந்த தகரப்பெட்டி அவர்கள் கண்ணில் பட்டது. "அது என்ன ? என்று கந்தனைக் கேட்டார்கள். “அதில் தான் கடவுள் இருக்கிருர். சாமியாருக்கு எல்லா வற்றையும் தருகிருர்’ என்று தன்னேயே அறியாமல் சொல்லி விட்டான் அவன். .

கந்தனுடைய அப்பா அந்தப் பெட்டியை உற்று நோக்கினர். அருகில் அந்த மந்திரக் கோலும் இருந்தது. சாமியார், "நான் சிறிது வெளியில் போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனர். இதுதான் சமயம் என்று கந்தனுடைய அப்பா அந்தப் பெட்டியை ஆராயத் தொடங்கினர், கந்தனுக்கு இரகசியத்தைச் சொல் லி விட வேண்டும் என்ற து டி ப் பு உண்டாயிற்று. சூ சுவாகா' என்று தட்டினல் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டான்.

உடனே ஆவல் நிரம்பிய அவனுடைய அப்பா அந்தக் கோலே எடுத்து, "சூ சுவாகா ! எனக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் வேண்டும்” என்று சொல்லித் தட்டினர். என்ன ஆச்சரியம் டப் என்று பெட்டி

திறந்தது. அதிலிருந்து ஒரு வெள்ளிக் கிண்ணம் வெளியில் வந்தது. பிறகு பெட்டி மூடிக் கொண்டது. அதைக் கண்டு அம்மாவும் அப்பாவும் ஆச்சரியத் தால் வாயைப் பிளந்தார்கள். அடுத்தபடி.."எனக்கு