பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


இத்தகைய சமுதாயத்தில் எதுதான் இயற்கையோடு இயைந்ததாக அமைந்து வளரும் என எதிர் பார்க்க முடியும்? எந்தத் தனியொரு பண்பைத் தான் பரிகசிக்க முடியும்? எல்லாமே பரிகசிப்புக்கும் பழிப்புக்கும் உள்ளாக்கப்பட வேண்டி விஷயங்களாகத்தானே இருக்கின்றன!

பார்க்கப்போனால், மனிதகுலத்தின் சரித்திரமே இப்படி 'சிரிச்சு துப்புவதற்கு' உரிய சின்னத்தனங்கள் நிறைந்ததாகவே உள்ளது. வாழ்வின் முக்கிய பிறச்னையான கல்யாணம் எப்படி நடைபெறுகிறது பொருத்தங்கள் பார்ப்பது எவ்வெத தன்மையில் உள்ளன என்பதைக் கூறும் கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் வேடிக்கை மனிதர்கள் நிறைந்த விந்தை உலகம் தான் இது" என்று எண்ணத் தோன்றும்.

நம் நாட்டில் சீர்வரிசைகள், பெயர்ப் பொருத்தங்கள், ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கிறார்களா! நாகரிகமும் பெண்ணுரிமையும் மிகுந்த மேல்நாடுகளில் அவரவர்களே 'பொருத்தம்' பார்த்துக் கொள்கிறார்கள்!

காதல் என்று சொல்லி எங்கும் திரியவேண்டியது. கொஞ்சநாள் கழித்து 'என்னைக் கல்யாணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதமா' என்று அவன் கேட்க வேண்டியது. இணங்கவோ, மறுக்கவோ அவளுக்கு உரிமை உண்டு. அவள் மனமிசைந்தால், விரலேபோடு ஒரு மோதிரம் 'என்கோஜ்மென்ட் ரிங்' மீண்டும் உல்லாசமாகத் திரியும் இந்த இன்ப மைனாக்கள் கல்யாணம் செய்து கொள்வது எப்பவேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு எப்பவேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு நடுவிலேயே அலுப்புற்று அபிப்பிராயபேதம் கொண்டுவிலகி விடுவோரும் உலர். கல்