பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 நல்வழிச் சிறுகதைகள்

வயிற்றுவலியை நிறுத்திவிட வேண்டும் என்று, ஒரு மருத்துவன் வீட்டுக்குச் சென்றான்.

மருத்துவன் அவன் உடலைப் பார்த்தான். வயிற்றை அமுக்கிப்பார்த்தான். பின் பல கேள்விகள் கேட்டான். கடைசியில் அவன், இவ்வயிற்று வலியைத் தீர்க்கக்கூடிய மருந்து ஒன்றே ஒன்று தான். பறம்பு மலையில் உள்ள ஒரு மூலிகையைக் கொண்டு வந்து அரைத்துக் கொடுத்தால் வயிற்று வலி நின்றுவிடும்” என்றான்.

"ஐயா, என்ன செலவு வந்தாலும் சரி, அம்மூலிகையைக் கொண்டுவந்து என் வயிற்றுவலியை நிறுத்துங்கள்" என்று கெஞ்சினான் அம்மனிதன். மருத்துவன் அன்றே பறம்பு மலைக்குப் புறப்பட்டுச் சென்று அம்மருந்து மூலிகையைத் தேடிக்கண்டு பிடித்துக்கொண்டு வந்தான். அதை அரைத்துக் கொடுத்தவுடன், அம்மனிதனின் வயிற்றுவலி நின்று விட்டது.

“என் உடலோடு பிறந்த இவ்வியாதி என் உயிரைக் கொல்ல இருந்தது. ஆனால், எங்கோ மலையில் பிறந்த இம்மூலிகை என்னைக் காப்பாற்றி விட்டது!" என்று மகிழ்ச்சியோடு கூறினான் அம்மனிதன்.


கருத்துரை :- கூடப்பிறந்தவர்களும் சில சமயம் கொல்லத் துணிவார்கள். முன்பின் தெரியாதவர்களும் சிலசமயம் துன்பத்தைத் துடைக்க முன் வருவார்கள். அவர்கள் நட்பை உதறிவிடக்கூடாது.