பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்னமும் காகமும்

ரு பூஞ்சோலையில் அன்னப் பறவை ஒன்று இருந்தது. அதே சோலையில் ஒரு காகமும் இருந்தது.

ஒரே சோலையில் இருந்தபடியால் இரண்டும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். சந்திக்கும்போது தான், தான் கண்டது கேட்டது பற்றி ஒன்றிடம் ஒன்று சொல்லிப் பேசிக் கொள்ளும்.

ஒரு நாள் அன்னம் எங்கோ போய்த் திரும்பி வந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அது திரும்பவும் புறப்பட்டது.

"அன்னம்மா, எங்கே புறப்பட்டு விட்டாய் ?” என்று காகம் கேட்டது.

காக்கையண்ணா, இந்தச் சோலையை அடுத்தாற்போல் அழகான குளம் ஒன்று இருக்கிறது. அங்கே சிவப்புச் சிவப்பாகவும் வெள்ளை வெள்ளையாகவும் அழகான தாமரைப் பூக்கள் மலர்ந்து விளங்குகின்றன. அவை அந்தக் குளத்தின் அழகை அதிகப்படுத்துகின்றன. அந்தக் குளத்திலேயே மிதந்து திரிந்து தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தாலே போதும். அதைக் காட்டிலும் இன்பம் வேறு கிடையாது. அந்தத்