பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 11

"முடியும் !” என்று உறுதியாகக் கூறினான் மலை நாட்டு வீரன்.

“உன்னால் முடியுமென்றால் முதலில் அதைச் செய். நானும் என் தம்பியும் பிறந்தது முதல் ஒருவரையொருவர் பகைத்தே வாழ்ந்தோம். எந்தச் செயலிலும் நாங்கள் ஒன்றுபட்டு நின்றதேயில்லை. ஒருவரையொருவர் கொன்று விடக் கூடச் சில சமயங்களில் முயன்றிருக்கிறோம். வீரா, உன்னோடு பழகியதிலிருந்து நான் உடன் பிறந்தவர்களிடையே எப்படிப்பட்ட உறவு நிலைக்க வேண்டுமென்பதை உணர்ந்து வருகிறேன்.

“எனக்கு ஏதோ ஒர் ஏக்கம் இப்போது மனத்திலே தோன்றி விட்டது. அண்ணன் தம்பியாகப் பழக வேண்டிய நாங்கள் இப்போது ஒருவர் மீதொருவர் போர் தொடுத்துக் கொண்டு நிற்கிறோம். உடன் பிறந்தவர்களாயிருந்தும் சுற்றத்தார்களாக இல்லாமல் பகைவர்களாக நிற்கிறோம். எங்கள் வாழ்நாளெல்லாம் இப்படியே பகைமையில் கழிந்து விடுமோ என்று கூடப் பயப்பட வேண்டியிருக்கிறது. வீரா, நீ எவ்வாறேனும் என் தம்பியை என்னுடன் உறவு கொள்ளச் செய்து விட்டால், உன்னை என் சின்னத் தம்பியாகவே பாவித்து அன்பு பாராட்டுவேன்!” என்றான் அரசன் அரியநாதன்.

“அரசே, கவலைப்படாதீர்கள். இப்போது கூட நீங்கள் என்னைத் தம்பி போல்தான் நடத்துகிறீர்கள். உங்களுக்கு உங்கள் தம்பியின் மீது அன்பு