பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16 நல்வழிச் சிறுகதைகள்
 

வளர்ந்து விட்டது. ஆனால், மலையில் விளையும் மூலிகை, நோயைக் குணப்படுத்துவது போல், எங்கோ மலைநாட்டிலிருந்து வந்த நீ, எங்கள் பகையைத் தீர்க்கும் மருந்து போல் பயன்பட்டாய்!” என்றான். இந்த வாசகங்கள் அவர்கள் மூவர் மனத்திலும் மகிழ்ச்சியை உண்டாக்கின.

கருத்துரை:-உடன் பிறந்தார் யாவரும் சுற்றத்தார் ஆகார் உடன் பிறந்தவர்களால் ஏற்படும் தீமைகளை, உடன் பிறவாத பிறர் வந்து நீக்குவதும் உண்டு.