பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 15

"தானும் தன் அண்ணனும் ஒற்றுமையாக இல்லாததால், மற்ற அரசர்களின் துணையை நாட வேண்டிய நிலையில் இருக்கிறோம் ; இருவரும் ஒற்றுமையாக இருந்தால் மாபெரும் வெற்றிச் சிறப்பையடையலாம்,’ என்ற எண்ணம் வலுத்தது.

பேசிப் பேசி அந்த மலை நாட்டு வீரன் பாச உணர்ச்சியை வடுகநாதன் உள்ளத்திலே வளரச் செய்தான். கடைசியில் கூடப்பிறந்தவனிடம் சரணடைவதில் அவமானம் எதுவும் இல்லை என்று கருதுகிற அளவுக்கு வடுகநாதன் மனத்தைக் கரைத்து விட்டான் மலைநாட்டு வீரன்.

வடுகநாதன் அண்ணனுக்கு ஒரு சமாதானக் கடிதம் எழுதியிருந்தான். அரியநாதன் தன் அன்பையெல்லாம் கொட்டி வைத்து, தம்பியை ஆவலோடு வரவேற்கக் காத்திருப்பதாகப் பதில் ஒலை அனுப்பினான்.

போர்க்களத்தில் சந்திக்கவிருந்த அண்ணனும் தம்பியும் அரண்மனையில் சந்தித்தார்கள். மலை நாட்டு வீரனும் கூட இருந்தான்.

அப்போது அரியநாதன் அந்த மலைநாட்டு வீரனை நோக்கிக் கூறினான்:

“உடன் பிறந்த நாங்கள் பகைவராக வாழ்ந் தோம். எங்கள் உடன் பிறந்த பகைமை என்னும் நோய் எங்களைக் கொன்றொழிக்கத் தக்க அளவு