பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32 நல்வழிச் சிறுகதைகள்
 

திண்ணனுடைய புகழ் பெருகுவதற்குப் பஞ்சப்பனும் ஒரு வகையில் ஒரளவு உதவியாயிருந்தான் என்று சொல்லலாம். ஓங்கி வளர்ந்த திண்ணனுக்குப் பக்கத்தில் பஞ்சப்பன் நிற்கும் போது, திண்ணனுடைய உடலின் தோற்றம் மிகுந்த எடுப்பாகத் தோன்றியது வீமசேனன் மாதிரி அவன் காட்சி அளித்தான்.

திண்ணன் பின்னால் வரும்போது, பஞ்சப்பன் சிறிது தூரம் முன்னால் கட்டியங் கூறிக் கொண்டு போவான்.

“மாவீரர் திண்ணன் வருகிறார்! மல்லிலே வெல்லும் மாவீரர் வருகிறார் ! யானையை அடக்கும் ஐயன்! சிங்கத்தை வெல்லும் சீரியர் ! புலியைப் புறங்கானச் செய்யும் போர்வீரர் ! மாவீரர் திண்ணன் வருகிறார் !என்று உரத்த குரலில் அவன் கட்டியங் கூறிக் கொண்டு செல்வதைப் பார்த்தாலே கலங்க வேண்டும்.

பஞ்சப்பன் கட்டியங் கூறுவதோடு மட்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை. திண்ணணுடன் போட்டியிட வரும் வீரர்களை ஆராய்வதிலும், அவர்கள் கையாளும் சூழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதிலும் திறமை மிக்கவனாக இருந்தான். அவனால் திண்ணன் பலமுறை முன்னெச்சரிக்கை யடைந்து போட்டிகளிலே வெற்றி பெற்றிருக்கிறான்.

ஒரு முறை திண்ணனோடு மல் புரிய வந்த ஒரு வீரன் தன் கையில் மிளகாய்ப் பொடியைத் தடவிக்