பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் . 83

கொண்டு வந்திருந்தான். போரிட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் கையைத் திண்ணனுடைய கண்ணில் வைத்து அழுத்தித் தேய்த்தால், கண் எரிச்சல் தாங்க முடியாமல் திண்ணன் திணறுவான்; அப்போது, தான் வெற்றியடைந்து விடலாம் என்று அந்தப் போர் வீரன் எண்ணியிருந்தான். ஆனால், பஞ்சப்பனுடைய மூக்கில் அந்த மிளகாய்ப் பொடியின் வாசம் பாய்ந்து விட்டது. அவன் மல் புரிய வந்த வீரனைக் கையை நன்றாகத் தேய்த்துக் கழுவி விட்டு வரும்படி கட்டளையிட்டான். அன்று போரில் திண்ணனே வென்றான்.

மற்றொரு முறை போர் புரிய வந்த வீரன் ஒருவன், தன் காற் பெருவிரல் நகங்களை ஊசி போல் கூராகச் சீவி விட்டுக் கொண்டு வந்திருந்தான். மல்லுக்கட்டி நிற்கும்போது பெருவிரலால் திண்ணனைக் குத்தி வருந்தச் செய்து எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பது அவன் திட்டம். பஞ்சப்பனின் கூரிய கண்கள் அந்தக் கூரான நகங்களைக் கண்டுபிடித்து விட்டன. அவன் உடனே ஒரு சிறு பேனாக் கத்தியை எடுத்து வந்து அந்தக் கூரான நகங்களைச் சீவியெறிந்துவிட்டான். அத்தோடு வந்த வீரனின் திட்டம் தவிடு பொடி, யாகி விட்டது. அவன் மல்லுக்கே நில்லாமல் ஓடி விட்டான்.

இப்படிப் பலமுறை திண்ணன் வெற்றி பெறப் பஞ்சப்பனுடைய அறிவு பயன்பட்டிருக்கிறது.