பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முன்னுரை

அண்மையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பேசும்போது நம் முதல்அமைச்சர் உயர் திரு பக்தவத்சலம் அவர்கள் சின்னஞ் சிறுவர்களுக்காகத் தமிழில் நல்ல பல நூல்கள் வெளிவர வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இதே கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டு நான் எழுதி வரும் நூல்களிலே மிகச் சிறந்த நூல் 'நல்வழிச் சிறு கதைகள்' என்ற இத்தொகுப்பு நூல்.

குழந்தை மனம் எந்தக் கருத்துக்கும் இடங்கொடுக்கக் கூடியது. குழந்தைப் பருவத்தில் படியும் கருத்துகள்தாம் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. எனவே குழந்தையுள்ளத்தில் நல்ல பல கருத்துகள் படியவேண்டும்- படியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தை முன் வைத்துத்தான் சிறுவர்கள் படிப்பதற்கென்று நம் தமிழகச் சான்றோர்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, மூதுரை ஆகிய பல் நீதி நூல்களை இயற்றினார்கள் ; அவற்றையே துவக்கப்பள்ளிகளில் பாடமாகவும் சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்த நூல்கள் நீதி நூல்களாக மட்டுமன்றி சிறந்த இலக்கியங்களாகவும் திகழ்கின்றன. இவற்றிலே காணப் படும் கருத்துகள் சிறந்த உவமைகளால் அழகு பெறுகின்றன. அந்த உவமைகளையும், கருத்துகளையுமே வைத்துக்கொண்டு பல கதைகளைப் புனைந்துள்ளேன்.