பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

தமிழில் இது ஒரு தனி முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றி தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்தக் கதைகளைப் படிப்பதால் சிறுவர் சிறுமியரின் உள்ளம் பண்பட்டு, அவர்கள் வருங்காலத்தில் நல்ல குடி மக்களாகத் திகழ்வார்கள். எவ்வாறெனில், அவர்களை உருவாக்கும் நல்ல கருத்துகளை இவை நயமாக எடுத்துக் கூறுவதால் என்க.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் களும், பெற்றோர்களும் பிள்ளைகளின் உள்ளத்தை விரிவடையச் செய்யும் இந்நூலை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பெரிதும் கேட்டுக் கொள் கின்றேன்.


சென்னை
நாரா. நாச்சியப்பன்
நூலாசிரியர்
21-12-64