பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 49

மாணிக்கம் தன் தூரத்து உறவினன் என்பதை அவர் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

மாணிக்கம் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அவர் மாளிகையிலேயே காலம் கழித்து வந்தான்.

ஒரு நாள் சாத்தப்பர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அன்று இரவு திடீரென்று எதிர்பாராத விதமாக ஆயுதந் தாங்கிய கொள்ளைக்காரர்கள் நூறு பேர் அவருடைய வீட்டை வளைத்துக் கொண்டார்கள். இருந்தவர்களை யெல்லாம் கட்டிப் போட்டார்கள். எதிர்த்தவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள். வீட்டில் இருந்த பொருள்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றார்கள்.

சாத்தப்பர் வெளியூரிலிருந்து திரும்பி வந்த போது, வீடு வெறிச்சென்று இருந்தது.

அவருடைய மனைவியும், மகளும், சமையற்காரனும், மாணிக்கமும் மட்டும்தான் வீட்டில் இருந்தார்கள். மற்ற உறவினர்கள் எல்லோரும் போய் விட்டார்கள்.

வீடு கொள்ளை போன செய்தியைக் கேட்டுச் சாத்தப்பர் இடிந்து போனார். போதாக் குறைக்குக் கடன்காரர்கள் வேறு வந்து விரட்டத் தொடங்கினார்கள். அவர், தம் கையிலிருந்த முத்துக்களை விற்றுக் கடன்களை அடைத்தார். பின் அவர் மிக எளிய வாழ்க்கை நடத்த நேர்ந்தது. அவர் மனைவி