பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.50 நல்வழிச் சிறுகதைகள
 

தன் தாய் வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லி மகளை அழைத்துக் கொண்டு போய் விட்டாள். சமையல்காரனும் வெளியேறிச் சென்று விட்டான்.

கடைசியில் மாணிக்கம் ஒருவன்தான் அவருக்குத் துணையாக அந்த வீட்டில் மிஞ்சினான். அவர் ஏதாவது கொண்டு வந்தால், அதை வைத்துச் சமையல் செய்வான். அவருக்குச் சப்பாடு போட்டுத் தானும் சாப்பிடுவான். அவர் ஏதும் கொண்டு வரவில்லையானாலும், வீட்டில் சாப்பாடு தயாராக இருக்கும். மாணிக்கம் மற்ற வீடுகளில் சென்று வேலை செய்வான். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அரிசியும் காய்கறிகளும் வாங்கி வருவான். அவற்றைச் சமைத்து வைப்பான்.

சாத்தப்பருக்கு எத்தனையோ கவலைகள் இருந்தன. ஆனால், சாப்பாட்டுக் கவலை மட்டும் இல்லை. அந்தக் கவலை ஏற்படாதபடி மாணிக்கம் பார்த்துக் கொண்டான்.

ஒரு நாள் சாத்தப்பர் மாணிக்கத்தைப் பார்த்து, “தம்பீ, என்னிடம் கையில் எதுவுமே இல்லை. பிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டேன். எல்லோரும் போய் விட்டார்கள். நீ மட்டும் ஏன் இருக்கிறாய்?” என்று கேட்டார்.

“ஐயா, எல்லோரும் போய்விட்டால் என்ன ஆவது ? நான் துன்பப்பட்ட காலத்தில் நீங்கள் அன்போடு வரவேற்று ஆதரித்தீர்கள். உங்கள் துன்பத்தில் நான் உதவ வேண்டியது என் கடமை