பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



62 நல்வழிச் சிறுகதைகள்

"ஐயா, இங்கே ஒரு பெண் நோயுற்றுக் கிடக்கிறாள். அவளை மருத்துவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் ஏழைகள்! வண்டிக்குக் கூலி தர இயலாது!” என்று கூறினான் பாண்டியன்.

“ஐயா, கூலி தரா விட்டால் ஒன்றும் கெட்டுப் போகப் போவதில்லை. ஆனால், மருத்துவச் கூலியில்லாமல் மருந்து கொடுக்க மாட்டாரே “ என்றான் வண்டிக்காரன்.

“அதெல்லாம் அங்கே போய்ப் பார்த்துக் கொள்ளலாம். முதலில் அவளை மருத்துவர் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம்!” என்றான் பாண்டியன்.

பாண்டியனும் அந்த வண்டிக்காரனும் அந்தப் பெண்ணைப் படுக்கையோடு அப்படியே தூக்கிக் கொண்டு வந்து வண்டியில் கிடத்தினார்கள். கிழவியும் ஏறிக் கொண்டாள்.

வண்டிக்காரன் முன்னால் ஏறி உட்கார்ந்து கொண்டு, மிக மெதுவாக வண்டியை ஒட்டிச் சென்றான். பாண்டியன் வண்டிக்குப் பக்கத்திலேயே நடந்து சென்றான்.

வழியில் பாண்டியன் அந்த வண்டிக்காரனோடு பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றி நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டான். அவன் பெயர் பொன்னன் என்று தெரிந்து கொண்டான்.

“பொன்னையா, நீங்கள் உள்ளுtக்காரராச்சே, அந்த மருத்துவரிடம் சொல்லி இந்த ஏழைப்