பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாரா. நாச்சியப்பன் 63

பெண்ணுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும்படி கேட்டுக் கொள்ளக் கூடாதா?” என்று பாண்டியன் கேட்டான்.

“கேட்கிறேன். ஆனால், அந்த மருத்துவன் மிகுந்த பண ஆசை கொண்டவன். இருந்தாலும் நான் எப்படியும் இலவச மருத்துவம் பார்க்கச் செய்து விடுகிறேன் !” என்று உறுதிக் குரலில் கூறினான் பொன்னன்.

“அவ்வாறு செய்தால், பொன்னையா ! உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு!” என்றான் பாண்டியன்.

“புண்ணியத்தை விட்டுத் தள்ளுங்கள். ஒருவருக் கொருவர் இரக்கப்படா விட்டால், அது என்ன மனிதத் தன்மையா?” என்று கேட்டான் பொன்னன்.

மருத்துவர் வீடு வந்து விட்டது. மருத்துவர் வீட்டுத் திண்ணையில் அந்தப் பெண்ணை இறக்கிப் படுக்க வைத்தார்கள்.

பொன்னன் கதவைத் தட்டினான். மருத்துவர், “யாரது இந்த இருட்டு நேரத்தில்?” என்று கடிந்து கொண்டே, கதவைத் திறந்தார். வந்திருந்தவர்கள் அத்தனை பேருடைய ஏழைக் கோலத்தையும் கண்டு, அவருக்கு எரிச்சல்தான் வந்தது.

“பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா ? அவசர மருத்துவ உதவிக்கு இரட்டிப்புக் கூலி தர வேண்டும் !” என்றார்.