பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 நல்வழிச் சிறுகதைகள்

"ஐயா,என்னைத் தெரியவில்லையா ? பொன்னன் !"என்று கூறினான் வண்டிக்காரன்.

“பொன்னனாயிருந்தாலும் கண்ணனாயிருந்தாலும் கூலி வேண்டும் முதலில்.”

மருத்துவரின் கண்டிப்பான பேச்சைக் கேட்டவுடன்,பொன்னன் ஆத்திரங் கொண்டான். ஆனால், அதை அடக்கிக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“ஐயா, மருத்துவரே ! செய்த உதவியைச் சொல்லிக் காட்டுவது சிறப்பல்ல. ஆனால், காலம் அவ்வாறு சொல்ல என்னை ஏவுகிறது. அன்றொரு நாள் காட்டு வழியில் கள்வர்கள் கையில் சிக்கி உயிரிழக்க இருந்த உங்களை நான் காப்பாற்றினேன். அதற்கு நீங்கள் நன்றி சொன்னீர்கள். அந்த நன்றியைச் செயலில் காட்ட வேண்டுகிறேன். அன்று உங்கள் உயிரை மீட்டதற்கு நன்றியாக இந்தப் பெண் உயிரைக் காப்பாற்ற வேண்டுகிறேன்!” என்று பொன்னன் கூறியவுடன், மருத்துவர் மனம் மாறியது.

அவர் அந்தப் பெண்ணின் கையைப் பார்த்தார். மருந்து கொடுத்தார். ஒரு வாரம் வரை தன் வீட்டிலேயே வைத்து மருந்து கொடுத்துக் காப்பாற்றுவதாக வாக்களித்தார்.

அதன் பின், பொன்னனும், பாண்டியனும் அங்கிருந்து புறப்பட்டனர்.

பொன்னன் வீடிருக்கும் தெருவைக் கேட்டுக் கொண்டு, அவனைப் பிரிந்த பாண்டியன், ஊருக்கு