பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 65

வெளியில் வந்தான். அங்குள்ள ஒரு மரத்தடியில் கட்டிக் கிடந்த தன் குதிரை மீது ஏறி மதுரை வந்து சேர்ந்தான்.

மறுமுறை அரசவையில் அறம் வென்றானைப் பற்றிப் பேச்சு வந்தபோது, பாண்டியன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி, “அறம் வென்றான் பாரியின் கால் தூசுக்குக் கூடக் காணாதவன். அவனிடம் அற உணர்வேயில்லை. எல்லாம் வெளிப்பகட்டு. பொன்னனை வேண்டுமானால் பாரிக்கு நிகராகச் சொல்லலாம்.பாரியிடம் இருந்த செல்வம் பொன்னனிடம் இல்லையே தவிர, பாரியின் கருணையுள்ளம் அவனிடம் பொருந்தியிருக்கிறது!” என்று சொன்னான்.

பாண்டியன் வாழ்த்துக்கு ஆளான பொன்னன், பின்னால் பல நலங்கள் பெற்று வாழ்ந்தான்.

கருத்துரை :- நல்ல மனத்தோடு செய்யும் அன்பான உதவிகளே அறமாகும் ; மற்றவையெல்லாம் வெறும் வெளிப் பகட்டேயாம்.