பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இளைஞன் எழுதிய கவிதை

வேலம்பட்டி என்ற ஊரிலே முத்து வடுகநாதன் என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது, எதுகை மோனைகளோடு கூடிய ஒரு வாசகத்தை அவன் பேசினான்.

அந்த வாசகம் அழகாயிருந்தது. அவன் நண்பர்களிலே ஒருவன் கூறினான், “முத்துவடுக நாதன் புலவர்களைப் போல் பேசுகிறான். அவன் பேசும் வாசகமெல்லாம் கவிதையாக வெளிவருகிறது !” என்று.

முத்து வடுகநாதனுக்கு நண்பன் பேச்சு பெருமை தருவதாயிருந்தது. தான் பேசுவது கவிதையாகவா இருக்கிறது என்று அவன் தன்னைத் தானே வியந்து கொள்ளத் தொடங்கினான்.

முத்து வடுகநாதன் கல்வி கற்றவனல்லன் : உள்ளுர்த் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் எழுதப் படிக்கக்கற்றுக் கொண்டிருந்தான். அந்த ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து, ஆத்தி சூடி,