பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.72 நல்வழிச் சிறுகதைகள்
 

பார்த்தவுடனேயே அவர் அதை மறுபடியும் கட்டித் தம் அருகில் வைத்து விட்டார்.

அவருடைய செயலைக் கண்டு முத்துவடுக நாதனும் அவன் நண்பர்களும் இடிந்து போனார்கள்.

வானம் இருண்டு கொண்டு வந்தது.

மங்கலங்கிழார், “அதோ பாருங்கள் ! அதோ பாருங்கள் !” என்று ஒரு திசையில் சுட்டிக் காட்டினார். இளைஞர்கள் திரும்பிப் பார்த்தனர்.

கார்மேகத்தைக் கண்டு ஒரு மயில் எழில் தோகை விரித்துக் களிநடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதன் அருகில் நின்ற வான்கோழி, மயில் ஆடுவதைப் பார்த்துக் தானும் தன் சிறகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது.

மயிலின் நடனத்தையும், வான்கோழியின் ஆட்டத்தையும் ஒன்றாகக் கண்ட அந்த இளைஞர்களை நோக்கி, “இப்போது புரிகிறதா, உங்கள் நண்பன் எழுதிய கவிதைகள் எப்படிப் பட்டவை என்று ?” எனக் கேட்டார் மங்கலங்கிழார்.

இளைஞர்கள் நாணித் தலை குனிந்தனர்.

கருத்துரை :- இலக்கண இலக்கியங் கல்லாதவனுடைய கவிதைகள் நல்ல கவிதைகள் ஆகா. அவற்றைச் சான்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.