பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இளநீர் குடித்த இளைஞன்

மகன் கிணற்றடியிலே குளித்துக் கொண்டிருந்தான். அவன் குளித்த நீர் நாலா பக்கமும் ஒடிக் கொண்டிருந்தது. பயனின்றிப் பரவிச் செல்லும் அந்த நீரை அவன் தந்தை பார்த்தார்.

“தம்பி, அதோ அந்தப் பக்கத்தில் நிற்கும் தென்னங் கன்றுக்குப் பாயும்படி ஒரு வாய்க்கால் வெட்டிவிடு" என்று சொன்னார், தந்தை.

‘இதென்ன வெட்டி வேலை !’ என்று மகன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான். ஆனால், தந்தையின் சொல்லை மீற முடியாமல், கிணற்றடி நீர் தென்னங் கன்றுக்குப் பாயும்படி வாய்க்கால் வெட்டி விட்டான்.

அன்று முதல் நாள்தோறும் அவர்கள் குளிக்கும் நீர் வாய்க்கால் வழியாக ஓடி தென்னங் கன்றுக்குப் பாய்ந்து கொண்டிருந்தது. தென்னங் கன்றும் நன்றாக வளர்ந்து வந்தது.

மகன் வெளியூருக்குப் படிக்கப் போய்விட்டான். பள்ளியைச் சேர்ந்த விடுதியிலேயே தங்கிப்