பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி 33

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும் சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்?-துன்று சுவை பூவிற் பொலிகுழலாப் பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து. (71)

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் தங்கட் குரியவரால் தாங்கொள்க-தங்கநெடும் குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால் கன்றினால் கொள்ப கறந்து. (72)

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம்-பிறர்க்குதவி செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல் முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. (73)

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் பூக்குழலாய் நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மை நிலை போம். (74)

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமம் செய்பவே-ஓதுகலை எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்குமால் கண்ணிரண்டும் ஒன்றையே காண். (75)

ந.-3